Sangathy
News

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினால் 10 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

Colombo (News 1st) தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(12) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

சுமார் 10 இலட்சம் கடிதங்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் நாட்டின் ஏனைய தபால் அலுவலகங்களிலும் தேங்கியுள்ளதாக அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம்(10) பிற்பகல் முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன் காரணமாக கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும் மத்திய தபால் பரிமாற்றகத்திலிருந்து எந்தவொரு தபால் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts

Jetwing Sea celebrates its Golden Jubilee

Lincoln

3 Lashkar-e-Jhangvi terrorists arrested in Pakistan

Lincoln

புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy