Sangathy
News

உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்தவும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றுக்கு நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட வினாப்பத்திரங்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்கு சமமான வினாக்களை வழங்குவதாக போஸ்டர்கள், பேனர்கள், கையேடுகள் ஆகியவற்றை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக பிரசாரம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது தமது திணைக்களத்திற்கு அறியத்தருமாறு பரீட்சைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

நத்தார் விடுமுறைக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

John David

Japan insists on ‘development finance in transparent and fair manner’

Lincoln

தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 3 உப குழுக்கள் நியமனம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy