Sangathy
News

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

எதிர்வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும்.

முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம் மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.

புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கி அதன் பிறகு படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகும்.

Related posts

People can no longer be fooled with false promise– Cardinal

Lincoln

3 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு

John David

சந்தேகநபரை கைது செய்யச் சென்று ஓடையில் வீழ்ந்த சாவகச்சேரியை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளை காணவில்லை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy