Sangathy
News

தேயிலைக்கான உரத்தின் விலையை குறைக்க தீர்மானம்

Colombo (News 1st) தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூடை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது உர மூடையொன்று 12,000  முதல் 14,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதன் காரணமாக தோட்ட உரிமையாளர்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவது குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஒரு ஏக்கரில் பறிக்கப்படும் தேயிலையின் நிறை 216 கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரத்தின் விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு அரசுக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

Related posts

French court approves Macron’s plan to raise retirement age

Lincoln

யாழ்.கல்வியங்காட்டில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது

Lincoln

Trump’s reaction when Mueller was appointed to investigate Russian meddling

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy