Sangathy
News

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி ஜெஃப் பெசோஸ் மீண்டும் முதலிடம்

Colombo (News 1st) உலக பணக்காரர் பட்டியலில் அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் டெஸ்லா (Tesla) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று (05) எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

Bloomberg நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின் படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டொலராக குறைந்துள்ள நிலையில், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

முன்பு, எலான் மஸ்க் உடன் ஒப்பிடுகையில், சொத்து மதிப்பில் ஜெஃப் பெசோஸ் மிகவும் பின்தங்கி இருந்தார்.

2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமேசான் பங்கு மதிப்பு இருமடங்கு உயர்ந்தது. அதேசமயம், 2021-க்குப் பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 50 சதவீதம் சரிவைக் கண்டது. இதனால், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு எலான் மஸ்கை நெருங்கியது. இந்நிலையில், தற்போது எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் Louis Vuitton நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ( Bernard Arnault) 197 பில்லியன் டொலர்  சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 179 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 150 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

115 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 11 ஆம் இடத்திலும் 104 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 12 ஆம் இடத்திலும் உள்ளனர்.

 

Related posts

மின் கட்டண பட்டியல் விவகாரம் தொடர்பில் தகவல் கோரி மின்சார சபைக்கு நாமல் ராஜபக்ஸ தரப்பில் கடிதம்

Lincoln

Kevin McCarthy elected US House Speaker after 15 rounds of voting

Lincoln

மீள ஆரம்பிக்கப்பட்ட குமுதினி படகு சேவை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy